புத்தகரம் கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

புத்தகரம் கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
X

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவால் கைது செய்யப்பட்ட ரஜினி

மயிலாடுதுறை அருகே புத்தகரம் கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த காமாட்சி அம்மன் உலோகச்சிலை கடந்த 2014-ம் ஆண்டு திருடு போனது. இதுகுறித்து குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், மயிலாடுதுறை அருகே தாழஞ்சேரியைச் சேர்ந்த ரஜினி(46) தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரஜினியை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரஜினியை வருகிற 15-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து போலீஸார் அவரை கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
why is ai important to the future