திருவிடைமருதூரில் சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம்

திருவிடைமருதூரில் சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம்
X

கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் காட்சி.

திருவிடைமருதூர் சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் சுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. நேற்று++- காலை யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு ஆலய விமானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 20க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் முன் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!