தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் மாணவர் கருத்தரங்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் மாணவர் கருத்தரங்கம்
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்,பாபநாசம் வட்டங்களில் மாணவர் கருத்தரங்குகளை தமிழ்நாடு அரசுதலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடந்தை இதயா மகளிர் கலைக் கல்லூரி, பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளிஆகிய இடங்களில் தமிழ்நாடுஅரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாக்களில் முத்தமிழறிஞர் கலைஞர் பன்முகஆற்றல் பற்றி பேச்சுப் போட்டிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.இவ்விழாக்களில் தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் பேசியதாவது:
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நான்கு தலைமுறைகளாக வழிகாட்டுவதோடு, எதிர்காலத்தில் அனைவருக்கும் நெஞ்சில் வைத்து போற்றுகிற தலைவராக கலைஞர் திகழ்ந்து கொண்டுள்ளார். தலைவர் கலைஞர் எழுத்துப்பணி, பேச்சாற்றல், இலக்கியத் துறை, சினிமாத் துறை ஆகிய துறைகளில் ஆற்றல் வாய்ந்தவராக சிறந்து விளங்கினார். சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினார். பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்காக செயல்படுத்தினார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இவ்விழாக்களை சிறப்பாக நடத்திட பணியாற்றிய அனைவரையும் பாராட்டுகிறேன் என்று தமிழக அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் பேசினார்.
இவ்விழாக்களில் சட்டமன்றஉறுப்பினர்கள் .க.அன்பழகன் (கும்பகோணம்) , எம்.எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்) ,சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் என்.ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் செ.பாண்டியன்,துணைச் செயலாளர்கள் அலமேலு, சுமதி, வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார்,கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் .தனராஜ்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu