கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
X
கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்படுத்திய சுவரொட்டி.
கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளர் பெயரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தல் பண நாயகமாக மாற அரசியல் வாதிகள் மட்டும் காரணம் இல்லை. வாக்காளர்களும்தான் காரணம்.

இதை நிரூபிக்கும் விதமாக கும்பகோணம் மாநகராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களை வறுத்தெடுத்து நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அதில் "மக்களின் பணத்தை அரசியல்வாதிகள் ஊழல் செய்வதில் எள் அளவும் தவறு இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கும் ஊழலின் பிறப்பிடமான வாக்காள பெருங்குடி மக்களே, உங்களை திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது. திருந்த வேண்டியதும் மாற வேண்டியதும் நான்தான் என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரால் கும்பகோணம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!