வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி சாலை மறியல்

வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி சாலை மறியல்
X

கும்பகோணம்- பூம்புகார் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்க கோரியும் ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்- பூம்புகார் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு பேரூராட்சி அதிமுக செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

தகவலின்பேரில் திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சாலை மறியல் இடத்திற்கு நேரில் சென்று அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!