ஓய்வுபெற்ற போக்குவரத்துதுறை அலுவலர் வீட்டில் திருடுபோன நகை மீட்பு : 2 பேர் கைது

ஓய்வுபெற்ற போக்குவரத்துதுறை அலுவலர் வீட்டில் திருடுபோன  நகை மீட்பு : 2 பேர் கைது
X

போலீஸாரால் மீட்கப்பட்ட நகைகள்

வீராச்சாமி வீட்டில் குடியிருந்த தாமரைச்செல்வி அவரது உறவினர் பாலாஜி ஆகியோர் இந்த திருட்டி ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது

ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வீட்டில் திருடு போன 36 பவுன் நகைகளை மீட்டு இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் வீராச்சாமி (64). ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலரான, இவருக்கு கடந்த 4ஆம் தேதி உடல் நிலை சரியில்லாததால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 6ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீராச்சாமி, உடனடியாக கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீராச்சாமி வீட்டில் குடியிருந்த தாமரைச்செல்வி மற்றும் அவரது உறவினர் பாலாஜி ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 36 பவுன் நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!