/* */

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் புணரமைப்பு பணி துவக்கம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் புணரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் புணரமைப்பு பணி துவக்கம்
X

பைல் படம்.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்கரபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் கோயிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. இதையடுத்து உபயதாரர்கள் பங்களிப்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி கோவில் குளத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் முன்னாள் நகர சபை தலைவர் தமிழழகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மல்லிகா, தக்கார் ராஜகுரு, பட்டாச்சாரியார் பட்டாபிராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Updated On: 4 Dec 2021 5:00 PM GMT

Related News