கும்பகோணம்: பள்ளி கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள்

கும்பகோணம்: பள்ளி கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள்
X

கும்பகோணத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்ததை முன்னிட்டு ஆர்வமுடன் சென்ற பள்ளி   மாணவர்கள்

கும்பகோணத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்ததை முன்னிட்டு ஆர்வமுடன் சென்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்

தமிழக அரசு பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்திக்க முடியாமல் ஆன்லைன் மூலம் படித்து வந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு நேரில் வந்திருந்து ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் கலந்து கொள்வதில் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சிரமங்கள் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வகுப்பாசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியாமலும், இணையதள இணைப்பு கிடைப்பதிலும் பெரும் சிரமங்கள் இருந்ததால் பல மாணவ மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story