கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு

கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு
X

கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

போக்குவரத்து தொழிலாளர்களுக்காக மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிட்டு வருகிறோம்

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் ஆய்வுகூட்டம் நடைபெற்றது

கும்பகோணம் கோட்ட அலுவலக வளாகத்தில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்து துறை அமைச்சர் திரு .எஸ். எஸ் சிவசங்கர் பங்கேற்று திறந்து வைத்து பேசியதாவது:

முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்து கழக ஊழியர்களின் நலனில்,அக்கறையோடு செயல்பட்டு வருகிறார் அந்த வகையில், கடந்த ஆட்சியில்ரூபவ் முடிந்திருக்க வேண்டிய 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை இப்பொழுது முடிக்கப்பட்டு 10 ஆண்டு காலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் கோரிக்கையான 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டுள்ள நமது முதலமைச்சர் கடந்த பட்ஜெட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்து தரப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் முதல் இடமாக தற்போது கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறைமுழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கையில் அறிவித்த ஒரு மாதத்திலே கும்பகோணம் கிளை அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கழக அலுவலகங்களில் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறை இதேபோன்று குளிர்சாதன வசதி செய்யப்படு திறக்கப்படும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது அக்கரை கொண்டு அவர்களுக்காக மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிட்டு வருகிறோம்.

கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா பகுதிகளை இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோலகும்பகோணத்தில் நவகிரக தலங்களை இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.தற்போதைய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை மாற்றம் செய்தால் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில்வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அரசுபோக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2000 பேருந்துகள் விரைவில் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்துகளை வாங்க டெண்டர் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.எனவே கும்பகோணத்தில் இருந்து நவகிரக ஸ்தலங்களை இணைக்கும் பேருந்து வசதி புதிதாக வாங்கப்படும் 2 ஆயிரம்பேருந்துகள் வந்த பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் .எஸ். எஸ் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா,கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப. தமிழழகன், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!