திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு

திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு
X

மாதிரி படம் 

திருவிடைமருதூரில் பள்ளி மாணவன் மர்ம சாவு குறித்து நாச்சியார் கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவிடைமருதூர் அடுத்த திருப்பந்துறை சேர்ந்தவர் கணேசன் மகன் மதுபாலன் (14). இவர் அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மதுபாலன் அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியப்பாவான பாலாமணி வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் 22 ந் தேதி மாலை பாலாமணி, மதுபாலனை அழைத்துக்கொண்டு வயலுக்குச் சென்றார். பாலாமணி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபொது அருகில் இருந்த மதுபாலனை காணாமல் தேடியுள்ளார். இந்நிலையில் வயலின் ஒரு பகுதியில் மதுபாலன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாச்சியார் கோயில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!