கும்பகோணம் சாரங்கபாணிகோயில் தேரோட்ட பாதுகாப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

கும்பகோணம்  சாரங்கபாணிகோயில் தேரோட்ட பாதுகாப்பு பணிகளை  கலெக்டர் ஆய்வு
X

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரை ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

கும்பகோணம் சாரங்கபாணிகோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாரங்கபாணி கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திக.அன்பழகன் ஆகியோர் (03.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!