கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்கல்

கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்கல்
X

கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ ஒரு லட்சம் வழங்கினர்.

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சத்தை, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் வழங்கினர்.

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன் ஆலோசனையின் பேரில், அக்கல்லூரியில் செயல்படும் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மூலம் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம், கொரோனா பெருந்தொற்று கால நிலையை கருத்தில் கொண்டு நிதி திரட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி கல்லூரி பேராசிரியர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது. அதில் 1 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் வரைவோலையாக வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அக்கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 28 பேருக்கு தலா 2000 வீதம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

மேலும் அக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் தாய் கொரோனா தொற்றுக்கு பலியானதை தொடர்ந்து, மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மீதமுள்ள பணம் ரூ.7 ஆயிரத்தை கொண்டு கொரோனா களப்பணி ஆற்றி வரும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு முகக் கவசம் மற்றும் சானிடைசராக வாங்கி வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!