கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்

கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
X
கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள்களுடன், பிரவுசின் செண்டர் நடத்தி வந்த கார்த்திக் பழகி வந்துள்ளார். இவர்களிடையே பண பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, தம்பதியின் மகள்கள், பிரவுசிங் செண்டர் சென்று, வீடு திரும்பவில்லை.

இதனால், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில், பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் தம்பதியின் மகள்கள் இருவரில் ஒருவரிடம் கார்த்திக் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்து வந்ததும், தர மறுத்ததால், அவரை கார்த்திக் அடித்து கொன்றதும் தெரிய வந்தது. அவரது உடலை, குமரன்குடி சுடுகாட்டில் உள்ள கருவக்காட்டில் புதைத்து விட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, கார்த்திக் (36), அவரது மனைவி சத்யா (32), மாமனார் பொன்னுசாமி (63), சத்யாவின் சகோதரர் சரவணன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் கார்த்திக், பொன்னுசாமி, சரவணன் ஆகியோர் மீது மாவட்ட எஸ்பி ரவளிபிரியா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டம் பதிந்து, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!