தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ 53.55 கோடியில் புதிய பால் பண்ணை தொழிற்சாலைக்கு அடிக்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ 53.55 கோடியில் புதிய பால் பண்ணை தொழிற்சாலைக்கு அடிக்கல்
X

தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டை அருகே பால் உற்பத்தி தொழில்சாலைக்கான பூமி பூஜையை தொடக்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்

புதிய பால் பண்ணை தொழிற்சாலை அமைப்பதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.53.55 கோடி மதிப்பில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை அமைப்பதற்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை ஊராட்சியில் பால் பண்ணை வளாகத்தில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை அமைப்பதற்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில்; மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், , மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.,ராமலிங்கம் , மாவட்டவருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கூறியதாவது: தமிழ்நாடுமுதலமைச்சர் உத்தரவிற் கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை ஊராட்சியில் பால்பண்ணை வளாகத்தில் ரூ.53.55 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 1 இலட்சம் திறனுடைய புதியபால் பண்ணை தொழிற்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும், கும்பகோணம் ஊராட்சிஒன்றியம் திப்பிராஜபுரம் ஊராட்சியில் ரூ.19.5 இலட்சம் மதிப்பிலும், பம்பப்படையூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்ககட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் தாராசுரத்தில் ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் புதிய ஆவின் பாலகத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியைபெருக்குவதற்காகமாவட்டம்தோறும் வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்தகாலங்களில் கடன் உதவிக்கு 15 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டது. தற்போது 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 200 கோடிரூபாய் அளவிற்கு புதிய கால்நடைகள் வாங்கவும்,பராமரிக்கவும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து ஒ ருலட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விவசாயிகளுக்கும் கால்நடை வாங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பால்வளத் துறைஅமைச்சர் த.மனோதங்கராஜ், தொழில்துறைஅமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் துறை ரீதியான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால்பண்ணை கட்டமைப்பு விவரங்கள், கிராம பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் உபபொருள் உற்பத்தி,பால் கொள்முதல் விவரம்,பால் விற்பனை விவரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பில் உள்ள பால் விநியோக மையங்கள், நிதிநிலை அறிக்கை போன்ற பல்வேறு பொருளடக்கங்கள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கறவை மாடு கடன் பால் உற்பத்தியாளர்களுக்குரூ.216.40 கோடி மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கு மானியத்துடன் கூடியகடன் உதவித் தொகைக்கானஆணையினையும்,பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்குரூ.50,000 மதிப்புள்ள , செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி முடித்த சங்க பணியாளர்களுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்புள்ள கொள்கலனும் , திருவலஞ்சுழி மற்றும் கரம்பயம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கத்திற்கு புதிய சங்கங்களுக்கான பதிவு சான்றிதழ்களும் ,பால் கொள்முதல் ஊக்கத்தொகையாகரூ.18.14 இலட்சம் சஞ்சய்நகர் மற்றும் பட்டுக்கோட்டைபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்புதிட்டத்தின் கீழ் புதியசங்ககட்டடம் அமைக்கரூ.78.08 இலட்சம் மதிப்பில் உள்ள ஆணைகளை ஈச்சங்கோட்டை,முன்னையம்பட்டி,காசாங்காடு மற்றும் கதிராமங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து,மாவட்டஅளவில் பிரதமபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு தமிழ் வழிக் கல்வியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 மாணவிகளுக்குரூ.17,000 ஊக்க தொகையினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் ;(திருவையாறு),டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை),.க.அன்பழகன் (கும்பகோணம்),தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் ,மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சு.ப.தமிழழகன் (கும்பகோணம்),ஆவின் பொது மேலாளர் மரு.சத்யா, பால் வளம் துணைபதிவாளர்கள் எஸ்.கே.விஜயலெட்சுமி (தஞ்சாவூர்), நவராஜ் (திருவாரூர்),கால்நடை மருத்துவ மேலாளர் மரு.மாதவக்குமாரன் ,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சு.க.முத்துசெல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!