தில்லியில் நடந்த போராட்டத்தை கைவிட்ட விவசாயிகளுக்காக புறாக்களை விட்ட விவசாயிகள்
போராட்டத்தை கைவிட்ட விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுவாமிமலையில் புறாக்களை பறக்கவிட்ட விவசாயிகள்
மத்திய அரசு கொரோனா கால கட்டத்தில் 3 அவசர வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், இச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்காண விவசாயிகள் திரண்டு 380 நாட்கள் தொடர் முற்றுகை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.இந்நிலையில், மத்திய அரசு, இச்சட்டங்களை திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்து போராட்டத்தை முடித்துக் கொண்டு விவசாயிகள் தத்தம் மாநிலங்களுக்கு திரும்புகின்றனர் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், போராட்டம் வெற்றிகரமாக முடிவிற்கு வந்ததது.
இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தேசிய கொடி கட்டிய டிராக்டர்களில், சுவாமிமலை அருகே உள்ள ஏராகரம் கிராமத்திற்கு வந்து அங்குள்ள வயல்வெளியில், பட்டாசுகள் கொளுத்தியும், பழங்கள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏராளமான புறாக்களை பறக்கவிட்டு, அதன் வாயிலாக புறாக்கள் விடும் தூதாக தங்கள் நன்றியை நூதன முறையில் தெரிவித்ததுடன், போராட்ட களத்தில் உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கமும் செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu