அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து. தலைமை அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் நடைபெற்றது
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து. தலைமை அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் நடைபெற்றது
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஓய்வூதிய விதிகளின். படி 2015 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்க வேண்டும், திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசு பொறுப்பேற்று வழங்க வேண்டும்,2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கவும் , ஆண்டு தோறும் வாரிசு பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம், உடனடியாக பேசி முடித்து 1.9.2023 முதல் சம்பள உயர்வு அறிவிக்க வேண்டும்,ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஈடு செய்யவும், போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும் உரிய நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன்,ரிவா சங்க நிர்வாகி எஸ்.கென்னடி , ஓய்வு பெற்றோர் நலச்சங்க ராமமூர்த்தி, ஐஎன்டியூசி தலைவர் பி.செல்வராஜ், ஏஐடியூசி தலைவர் என்.சேகர், டிஏ மீட்பு குழு கே.ஆர். ஞானசேகரன், ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், சி ஐ டி யு மாநில செயலாளர் சி.ஜெயபால்,
ஐ என் டி யூ சி தலைவர் வைத்தியநாதன், எம் . எல்.எப். பொதுச்செயலாளர் பாலு,அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் முன்னாள் பொது மேலாளர்கள் ராஜாராமன், சந்திரசேகரன், ராஜேந்திரன், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் துரை.மதிவாணன், பி.அப்பாத்துரை, என் . மோகன்ராஜ் எம்.கண்ணன், எஸ்.செங்குட்டுவன், என் . கோபிநாதன், எஸ்.தாமரைச்செல்வன், எஸ்.ராமசாமி, ஞானசேகரன் எஸ்.கணேசன், நாகராஜ், உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu