கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வாடகைக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வாடகைக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர்

கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கும்பகோணம் பெசன்ட் ரோடு முகவரியில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் தனியார் மருத்துவ மனைக்கு வாடகைக்கு விடுவதை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம் பெசன்ட் ரோடு வாடிக்கையாளர் சேவை மைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணத்தில் மையப்பகுதியில் பொதுமக்களுக்கு சேவை செய்துவரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சார்ந்த லாபத்தில் இயங்கி வரும் சேவை மையத்தை தனியார் மருத்துவமனைக்கு வாடகைக்கு விடக்கூடாது.

மேலும் மருத்துவமனை விதி முறைகள் மற்றும் மருத்துவ கழிவு விதிமுறைகள் பின் பற்றாது செயல்படும் பிஎஸ்என்எல் நிர்வாகம் இதன் ஆபத்து குறித்து பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம் வழங்கியும் நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை. மேலும் இந்த ஆபத்து குறித்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியும் மீண்டும் பிஎஸ்என்எல் நிர்வாகம் தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதை கண்டித்து முழக்கமிட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்