கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார தொழிற்சங்க ஊழியர்கள் 

கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டட்திற்கு பொறியாளர் சங்க நிர்வாகி குணசீலன் தலைமை தாங்கினார். மின்சாரவாரிய தொழிலாளர் நலக்கூட்டமைப்பு நிர்வாகி மோகன்தாஸ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பஞ்சு ராஜேந்திரன், சேரலாதன், அண்ணாதுரை, முருகேசன், சிஐடியூ தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் மின்சார மசோதா 2021 உடனே திரும்பப்பெற வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் நிர்வாகி முருகையன், பொறியாளர் சங்க நிர்வாகி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!