கும்பகோணம் திருப்பனந்தாள் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி ஏலம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட கும்பகோணம் திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் நடப்பு 2022 ஆம் ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் 01.06.2022 முதல்; தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் போது பருத்தி கொள்முதல் செய்ய இந்திய பருத்திக் கழகத்தினர், உள்ளூர் மற்றும் பிற மாவட்ட பருத்தி வணிகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். எனவே பருத்தி விவசாயிகள் பருத்தியினை தங்கள் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாட்களில் மறைமுக ஏலத்தி;ல் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இம்மறைமுக ஏலமானது பிரதி வாரம்; புதன்இ வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் முறையே கும்பகோணம்இ திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஓழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறும்.
விவசாயிகள் அதிகபட்ச விலை கிடைக்க ஏதுவாக தங்கள் பருத்தியினை நன்கு நிழலில் உலரவைத்துஇ தூசு போன்றவற்றை நீக்கி தரமான பருத்தியினை விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி கொண்டு நல்ல விலை பெற்று பயன் பெற கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள கும்பகோணம்(0435-2481285)இ பாபநாசம்(04374-222423) மற்றும் திருப்பனந்தாள் (0435-2456447) ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பொறுப்பாளர்களை அணுகி உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu