வீடுகளில் மின் அளவீடு, இணைப்பு, மின் வெட்டு செய்ய புதிய கருவி கல்லலூரி மாணவிகள் கண்டுப்பிடிப்பு
கொரோனா பரவலில் இருந்து மின்வாரிய ஊழியர்களை காப்பாற்றும் விதமாக அலுவலகத்தில் இருந்தபடியே மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பைத் துண்டித்தும் மற்றும் மின் இணைப்பு கொடுக்கும் புதிய மின்னணு சாதனத்தை கும்பகோணம் பொறியியல் கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிகமாகப் பரவி வரும் சூழலில் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மின்சார கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. .
இதனை தடுக்கும் விதமாக கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுபத்ரா, ஸ்ப்ரிங்பா, பிரபா ஆகியோர் ஸ்மார்ட் பவர் டிஸ்ட்ரிபியூஷன் என்ற மின்னணு சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் மின் வாரிய ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தபடியே மின்சார உபயோகத்தை கணக்கெடுத்து அதன் கட்டணத்தை அவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப முடியும்.
மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பவர்களின் மின் இணைப்புகள் இருந்த இடத்தில் இருந்தபடியே துண்டிப்பு செய்யவும் , மின் இணைப்பை மீண்டும் செயல்படுத்தவும் இந்த நவீன கண்டுபிடிப்பு மூலம் செயல்படுத்த முடியும் என இதனை கண்டுபிடித்த மாணவிகள் தெரிவித்தனர்.
தற்போது கொரோனா பரவி வரும் சூழலில் மின்வாரிய ஊழியர்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க இந்த கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும் எனவும் மாணவிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu