சுவாமிமலை அருகே உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி

சுவாமிமலை அருகே உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி
X

தேவனாஞ்சேரி கிராமத்தில்,  தமிழ்நாடு நீர்வள, நிலவள, திட்டத்தின் கீழ்,  உழவர் வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. 

சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரி கிராமத்தில், தமிழ்நாடு நீர்வள, நிலவள, திட்டத்தின் கீழ், உழவர் வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. இதில், தேவனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, ஐந்து அணிகளாக ஒரு அணிக்கு 5 விவசாயிகள் வீதம் பிரிந்து குழுக்களாக வயல்வெளியில் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை இனம்கண்டு குறித்து கொண்டனர்.

இந்த வயல்வெளிப் பள்ளி பயிற்சியில், கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் சாரதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன், மணவாளன், ராஜேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் எலியால் இனப்பெருக்கம் ஆவதை கட்டுப்படுத்தும் முறைகள், உழவர் உழவியல் முறை, உயிரியல் முறை, ரசாயன முறைகள், பற்றியும் எலிகளுக்கு விஷ உணவு வைப்பது பற்றியும் துணை வேளாண்மை அலுவலர்கள் கூறினார்கள்.

நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி செய்து அதிக மகசூல், அதிக வருமானம் பெறுவது பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் சுற்றுவட்டார விவசாயிகள், வேளாண்மை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!