ஸ்டாலின் ஹீரோ அல்ல ஜீரோ-எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் ஹீரோ அல்ல ஜீரோ-எடப்பாடி பழனிசாமி
X

திமுக தலைவர் ஸ்டாலின் ஹீரோ அல்ல ஜீரோ என கும்பகோணம் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு வாக்கு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உச்சி பிள்ளையார் கோவில் அருகே வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போதெல்லாம் இந்த ஆட்சி ஓரிரு நாளில் போய்விடும் ஒரு மாதத்தில் போய்விடும் என எங்கு பார்த்தாலும் பேசி வந்தார். ஆனால் ஒரு மாதம் நான்கு மாதம் அல்ல, நான்கு ஆண்டு காலம் நிறைவு செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டு உள்ளது இந்த ஆட்சி.

ஸ்டாலின் திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோவைப் போல மேடைக்கு வருகிறார் ஆனால் அவர் ஹீரோ இல்லை ஜீரோ.மேலும் அதிமுக இதுவரை செய்த நல திட்டங்கள் குறித்தும், இனிமேல் செய்யவிருக்கும் நலத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

Tags

Next Story
ai in future agriculture