பட்டுக்கோட்டை கோட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு
பட்டுக்கோட்டை கோட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய ஐந்து வட்டாரங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை எவ்வாறு செயல்படுத்துகின்றனர் இனி செயல்படுத்த மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி அலுவலர் வாரியாக ஆய்வு செய்தார்.
அப்போது அவர் வேளாண் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அனைத்து திட்டங்களையும் திருப்தியாகவும் நேர்த்தியாகவும் விவசாயிகளுக்கு ஏற்ற நேரத்தில் கிடைக்கும் வகையிலும் செயல்படுத்திட கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், பி எம் கிசான் திட்டத்தின் கீழ் நில ஆவணங்களின் உரிமை குறித்த ஆய்வு மற்றும் பி எம் கிசான் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்கும் இ கேஒய்சி பணியினையும் ஆகஸ்ட் 15க்குள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு முடிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்த தேவை விபரம் வழங்கியுள்ள அறிக்கையினை வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் இணைந்து நிதி தேவையுடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மாலதி செய்திருந்தார். ஆய்வுக் கூட்டத்தில் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வநாயகம், சேதுபாவாசத்திரம் வேளாண்மை இயக்குனர் சாந்தி, திருவோணம், சுதா மற்றும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி உட்பட கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தினை வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் பொறுப்பு சாருமதி ஒருங்கிணைத்தார். ஆய்வுக் கூட்டத்திற்கு பின் வேளாண் கூடுதல் இயக்குனர் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அத்திவெட்டி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித்துறை வேளாண் பொறியியல் துறை மற்றும் சொந்தமாகவும் பண்ணை குளங்கள் வெட்டி தற்போது மீன்வளத் துறையின் மூலம் உள்நாட்டு மீன் வளர்ப்புகாக மானியம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள அத்திவெட்டி பெரியசாமி உள்ளிட்ட இரண்டு விவசாயிகளின் பண்ணை குட்டைகளை நேரடியாக ஆய்வு செய்தார்.
மேலும் இந்த ஆண்டும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் பண்ணை குட்டைகள் வெட்டி நீர் சேமிக்கவும் மீன் வளர்த்து வருமானத்தை பெருக்கும் வகையில் திட்டங்களை விவசாயிகளிடம் சேர்த்திட கேட்டுக்கொண்டார். வேளாண் துணை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர்கள் முருகேஷ் ஜெரால்டு மற்றும் பூமிநாதன் கள ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மானியத்தில் மீன் வளர்ப்பதற்கு கலைஞர் திட்டத்தின் கீழ் அத்திவெட்டியில் 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்த விபரத்தை தெரிவித்தார். வேளாண் துணை இயக்குனர் பொறுப்பு சாருமதி மற்றும் பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர் நவீன் சேவியர் ஆகியோர் தற்போது வளர்ந்து வரும் உள்நாட்டு மீன் வளர்ப்பு பற்றி கூடுதல் இயக்குனரிடம் எடுத்துரைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu