ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கல்
கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் டாக்டர்கள்.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன. மதுக்கூர் வட்டாரத்தில் முத்துப்பேட்டை சந்தையில் கறவை மாடு மற்றும் ஆடுகள் வாங்கப்பட்டன. அவைகள் உரிய கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆய்வு செய்யப்பட்டு காப்பீடு செய்யப்பட்டன. மதுக்கூர் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் அண்டமி, வேப்பங்குளம் நெம்மேலி, ஒலயகுன்னம், கன்னியாகுறிச்சி புளியங்குடி மற்றும் பாவாஜி கோட்டை ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 50 விவசாயிகளுக்கும் வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து ஒரு விவசாயிக்கு ரூ. 45ஆயிரம் என்ற கணக்கில் 50 சத மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கறவை மாடு மற்றும் 10 ஆடுகள் என ரூ.30 ஆயிரம் மானியமாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. காப்பீட்டு பணி முடித்து உரிய ஆவணங்கள் கால்நடை மருத்துவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டப் பின் அவர்களின் பரிந்துரையுடன் வேளாண் இணை இயக்குனர ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் மேற்கண்ட ஏழு கிராமங்களில் ஒலயகுன்னம், புளியகுடி கிராமம் தவிர்த்து பிற கிராமங்களைச் சேர்ந்த 34 விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய கறவை மாடு மற்றும் பத்து ஆடுகளுக்கு காப்பீட்டு பணிகளை கால்நடை மருத்துவர்கள் கார்த்திகேயன், சங்கர், இளவரசி ஆகியோர் செய்தனர். முத்துப்பேட்டை கால்நடை சந்தையில் கால்நடை மருத்துவர்களின் உதவியாளர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், சுரேஷ், ஜெரால்ட், முருகேஷ், தினேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் கால்நடைகள் வாங்குவது நடைபெற்றது.
ஆவணப்படுத்தும் பணிகளை அட்மா திட்ட பணியாளர்கள் சுகிதா ராஜு, ஐயா மணி மற்றும் சிசி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி பவித்ரா மற்றும் பவதாரணி மற்றும் இன்சூரன்ஸ் திட்ட அலுவலர்கள் மணி, சரண் மற்றும் சுதன் ஆகியோர் செய்து இருந்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் துணை அலுவலர் அன்புமணி, உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோர் பணிகளை மேல் ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu