பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி

பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி
X

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புள்ளியல் துறை அலுவலர்களால் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புள்ளியியல் துறை துணை இயக்குனர் செல்வம் முன்னிலை வகித்தார். புள்ளியியல் துறை உதவி இயக்குனர் பாஸ்கரன் மற்றும் மத்திய அரசின் புள்ளியல் துறை சேர்ந்த அலுவலர் கலந்து கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சேர்ந்த அனைத்து கள அலுவலர்களுக்கும் உணவு தானிய உற்பத்தி திறனை நிர்ணயிக்கும் பொருட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கலப்பு பயிர் மற்றும் தனி பயிர்களுக்கான பயிர் அறுவடை மகசூல் கணக்கிடும் முறைகள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளை தேர்வு செய்யும் முறைகள்குறித்து விளக்கிப் பேசினார்.

வேளாண் உதவி இயக்குனர் மாலதி பயிற்சி அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை மதுக்கூர் மற்றும் பேராவூரணி சேதுபாவசத்திரத்தை சேர்ந்த புள்ளியியல் ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் உட்பட்ட வட்டார வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், பயிர் பரிசோதனை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project