மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கதிரிகடலை விதைகள்

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கதிரிகடலை விதைகள்
X

காசாங்காடு பாலசுப்பிரமணியத்திற்கு குருவை தொகுப்பு திட்ட மாற்று பயிர் இனத்தில் 50% மானியத்தில் கதிரி விதை கடலை கடலை நுண்ணூட்டம் மற்றும் சூடோமோனஸ் வழங்கப்பட்டது.

குறுவை தொகுப்பு திட்டத்தில் மாற்றுபயிர் சாகுபடியின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கதிரிகடலை விதைகளை வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.

குறுவை தொகுப்பு திட்டத்தில் இவ்வருடம் புதிதாக மாற்றுப் பயிர்களான நிலக்கடலை, உளுந்து மற்றும் கேழ்வரகு சாகுபடியினை ஊக்குவிக்கும் பொருட்டு 50% மானியத்தில் பொது விவசாயிகளுக்கும், எஸ்சி விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும் நுண்ணூட்டம் மற்றும் சூடோமோனஸ் எதிர் உயிரியுடன் கதிரி விதை கடலைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உழவன் செயலியில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்த விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஏக்கருக்கு 80 கிலோ கடலை விதை 5 கிலோ கடலை நுண்ணூட்டம் மற்றும் ஒரு கிலோ சூடோமோனஸ் அடங்கிய தொகுப்பு ரூபாய் 8500 மதிப்புடையது ரூபாய் 4000 மானியம் போக 4500 விவசாயி பங்கு தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.

மதுக்கூர் வட்டாரத்தில் 30 ஏக்கருக்கு இலக்கு பெறப்பட்டு கலைஞர் திட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தேவையுள்ள விவசாயிகள் சிட்டா ஆதார் நகல் உடன் விபரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து வேளாண் உதவி அலுவலரிடம் ஆவணங்களை பரிசீலித்த பின் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் கதிரி விதை கடலை வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் காலத்தே அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி புலவஞ்சி கிராமத்தில் செல்வமணி மற்றும் பெரிய கோட்டை கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் ஆகியோருக்கு மானியத்தில் வழங்கினார். இடுபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ் மற்றும் கார்த்திக் செய்திருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!