மதுக்கூர் வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மதுக்கூர் வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

மதுக்கூர் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வாட்டாகுடி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெறும் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊராட்சி மன்றக் கட்டிடம் சிமெண்ட் கற்கள் மூலம் சாலை அமைக்கும் பணி சமுதாய உறிஞ்சி குழிகள் மற்றும் 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு கட்டிடத்தின் பூச்சு முதலான பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு மற்றும் செல்வேந்திரன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்து பணி முன்னேற்றங்கள் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினர். பின் வேளாண்துறையில் மூலம் இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக வாட்டாகுடி கிராமத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படைத் தரவுகள் சேகரிக்கும் பணி பற்றி வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர் கார்த்தி ஆகியோரிடம் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை கோட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர் மெய்யநாதன் உடனிருந்து தற்போதைய பணிகளின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.

Tags

Next Story
பாஸ்ட் ஃபுட்க்கு செய்ற செலவ  இந்த நட்ஸ் &  ட்ரை ஃப்ரூட்ஸ்க்கு செய்ங்க..! அப்றம் உங்க உடம்புல என்ன ஆகுதுனு பாருங்க..! | Dry fruits and Nuts benefits in tamil