ஐப்பசி சதயம் பேரரசர் இராஜராஜர் பிறந்தநாள்: தஞ்சை கோயில் கல்வெட்டு சிறப்பு
தஞ்சை பெரியகோவில் திருச்சுற்று மாளிகையின் வடபுறத்தில்.. அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள, திருச்சுற்று மாளிகையின் பக்கச் சுவற்றில் உள்ள ஒரு கல்வெட்டு
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. 3. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தஞ்சை பெரியகோவில் திருச்சுற்று மாளிகையின் வடபுறத்தில்.. அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள, திருச்சுற்று மாளிகையின் பக்கச் சுவற்றில் உள்ள ஒரு கல்வெட்டு.. இக்கல்வெட்டு நான்கு வகைகளில் சிறப்பான ஒன்று..
கல்வெட்டு வாசகம்... ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் உடையார்க்கு ஸ்ரீகார்யம் செய்கின்ற ஆற்றூருடையான் நக்கன் தொன்றி உடையார் கோயிலில் திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது வரை குடுத்தன கல்லில் வெட்டியது. ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு சாத்தியருள குடுத்த தாலி ஒன்று பொன் ஆடவல்லானால் ஒரு கழஞ்சரை இவர்க்கே ஸ்ரீராஜராஜதேவர் சிறுதனத்து இரட்ட குலகால தெரிந்த உடநிலை குதிரைச் சேவகரில் உடையார் கோயிலில் கல்லில் எழுத்து வெட்டுவிக்கின்ற அருமொழி தேவ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து சாத்தங்குடி வெள்ளாளன் இரவி பாளூருடையார்
ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு மூன்றாவது வரை குடுத்த பட்டைக்காரை ஒன்று பொன் ஆடவல்லான் என்றும் கல்லால் நிறை முக்காலே மூன்று மஞ்சாடி.பெரியகோவிலின் திருச்சுற்று மாளிகையில் உமா பரமேஸ்வரிக்கு ஒரு பரிவார ஆலயம் ஒன்று இருந்துள்ளது. இத்தேவிக்கு , இரவிபாளூருடையார் என்பவர் நிவந்தமாக தாலி ஒன்றை. வழங்குகிறார். இந்த தானம்பற்றிய விபரங்கள் இராஜராஜனின் 29 ஆம் ஆட்சியாண்டிலும், இராஜேந்திரனின் 3 ம் ஆட்சியாண்டிலும் பதிவு செய்யப்பட்டது..
இக்கல்வெட்டின் சிறப்பு...1 இராஜராஜனின் பெயரும், இராஜேந்திரன் பெயரும் ஒரே சாசனத்தில் இடம்பெறுகிறது. தந்தை அரசனாகவும், மகன் இளவரசனாகவும் இருந்த காலம்..
சிறப்பு... 2 திருச்சுற்று மாளிகையில் அம்மனுக்கென்று தனித்த ஆலயம் ஒன்று இருந்துள்ளது. திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி என்பது கல்வெட்டு வாசகம்.
சிறப்பு ...3ஆலயத்து பரமேஸ்வரிக்கு நிவந்தமாக தாலி ஒன்று கொடுக்கப்பட்டது..." ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு சாத்தியருள குடுத்த தாலி ஒன்று என்பது கல்வெட்டு வாசகம். தாலி என்னும் சொல் கல்வெட்டில் இடம் பெறுகிறது.
சிறப்பு..4இந்த தானத்தை வழங்கியவர் பெயர் இரவி பாளூருடையர். இவர்தான் தஞ்சை பெரியகோவில் காணப்படும் கல்வெட்டுக்களை கல்லில் எழுதியவர். மேலும் ஒரு சிறப்பாக இவர் இராஜராஜனின் குதிரைப்படையில் பணியாற்றும் ஒரு போர் வீரர். சிறுதனத்து இரட்ட குலகால தெரிந்த உடநிலை குதிரைச் சேவகரில் உடையார் கோயிலில் கல்லில் எழுத்து வெட்டுவிக்கின்ற அருமொழி தேவ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து சாத்தங்குடி வெள்ளாளன் இரவி பாளூருடையார் கோவிலைக் கட்டிய தச்சரின் பெயர் இருப்பது போலவே, கல்லில் எழுத்துக்களை கல்வெட்டுக்களாக எழுதியவரின் பெயரும் உள்ளது.இவ்வாறாக நான்கு வகைகளில் சிறப்புற்ற கல்வெட்டு இது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu