தஞ்சை, மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா உழவர் ஆலோசனை குழு கூட்டம்

தஞ்சை, மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா உழவர் ஆலோசனை குழு கூட்டம்
X

மதுக்கூர் வட்டார அட்மா திட்ட வட்டார உழவர்ஆலோசனை குழு கூட்டம்.

மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் வட்டார உழவர்ஆலோசனை குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் வட்டார உழவர்ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வட்டாரத்தை சேர்ந்த உழவர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மதுக்கூர் வேளாண்மை அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். மதுக்கூர் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுகிர்தா வரவேற்றார். வேளாண் துறையின் திட்டங்கள், திட்டங்களை விவசாயிகள் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி வேளாண்மை அலுவலர் சாந்தி எடுத்துக்கூறினார்.

அட்மா உழவர் ஆலோசனைக்குழு தலைவர் இளங்கோ அட்மா திட்ட பயிற்சிகளை சிறப்புற செயல்படுத்திட கேட்டுக்கொண்டார். மதுக்கூர் வடக்கு மூர்த்தி , நிலக்கடலை பயிரில் களை எடுப்பதற்காக சொந்தமாக உருவாக்கியுள்ள களையெடுப்பு கருவியைப் பற்றி எடுத்துக் கூறினார். கூட்டத்தில் பங்குபெற்ற அட்மா திட்ட உழவர் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சுகிதா மற்றும் அய்யாமணி செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future education