தஞ்சை பாரில் மது வாங்கிக் குடித்த 2 பேர் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை..!
டாஸ்மாக் பார் (கோப்பு படம்)
அண்மையில் விஷச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே கீழவாசல், கீழ் அலங்கம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை உள்ளது. அந்த மதுபான கடைக்கு அருகே பார் செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அந்த பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே காலை 11 மணி அளவில் என்ற 60 வயதுடைய குப்புசாமி என்பவர் மது வாங்கி குடித்துள்ளார். குடித்துவிட்டு வெளியே வரும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே சுருண்டு விழுந்துவிட்டதாகத் தெரிகிறது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோலவே அந்த பெரியவர் மது வாங்கிக்குடித்த சில நிமிடங்கள் கழித்து அதே பாரில் அதே போன்ற மதுவை வாங்கிக் குடித்த விவேக் என்ற 36 வயது இளைஞரும் சாலையில் சுரண்டு விழுந்து உள்ளார்.
அவரும் உடனடியாக அவரையும் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
இந்தசம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் தாசில்தார் தங்க.பிரபாகரன் மற்றும் கடையின் சூப்பர்வைசர் முருகன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி கடைக்குள் பூட்டிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் உயிர்பலி எடுத்துவரும் சூழலில் தஞ்சையில் உள்ள பாரில் உயிரிழந்த இருவரும் குடித்தது டாஸ்மாக் மதுவா..? அல்லது கள்ளச்சந்தையில் இறக்கப்பட்ட மதுவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர்கள் வாங்கிக் குடித்த அந்த மது வகையையும் டாஸ்மாக் கடையில் உள்ள மதுவையும் சோதனை இட கோரிக்கை வலுத்துவருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu