மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் : வனத்துறை வேண்டுகோள்

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் : வனத்துறை வேண்டுகோள்
X

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் என வனத்துறை துணை வனப்பாதுகாவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் இயற்கை வளப் பாதுகாப்பு விழா எம்.ஆர்.மருத்துவமனை கூட்ட அரங்கில் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல் தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கான இயற்கை பாதுகாப்பு ஒலி, ஒளி, மாசுபாடுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒவிய, கட்டுரை போட்டிகளில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 131 மாணவர்கள் பங்கேற்றனர்.

காணொலி மூலம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றிய முனைவர் துணை பாதுகாப்பு அலுவலர் செல்வம் பேசுகையில், இன்றைய சூழலில் இயற்கை வேகமாக மாசுபட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டுமென்றால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு மரக் கன்றுகளையாவது நட்டு வளர்க்க வேண்டுமென கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!