பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு

பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு
X
சங்கரன்கோவில் அருகே, பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், வீட்டை பூட்டிவிட்டு, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25,சவரன் மதிப்புள்ள தங்க நகை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறிந்து, சேர்ந்தமரம் காவல்துறையினருக்கு ராமசாமி தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல்துறையினர், தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கள்ளம்புளி கிராமத்தில் கொள்ளையடித்து சென்ற சம்பவம், சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!