குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
X

குட்டிகளுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.

கடையநல்லூர் கல்லாற்றுப் பகுதிகளில் குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணி தீவிரம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது. அதில் விவசாயிகள் தென்னை, வாழை, மா, நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வப்போது காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கம்.

இன்று கடையநல்லூர் பீட் கல்லாறு காட்டுப்பகுதிகளில் 2 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் சுற்றித் திரிவதாக அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வான ரேஞ்சர் சுரேஷ்டம் தகவல் அளித்தனர். அதன் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் பீட் வனவர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு யானைகளை, வெடிவைத்து சைரன் ஒளித்து இரவுபகலாக வனத்துக்குள் தீவிரமாக விரட்டி வருகின்றனர்.

எனவே கல்லாறு வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கடையநல்லூர் பொதுமக்கள் குளிப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள கல்லாறு பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself