விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
விளைநிலத்தில் புகுந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் குப்பத்து ஓடை பகுதிகளில் தென்னை வாழை மா பயிரிட்டுள்ளனர்.
இங்கு இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரிந்த யானைகள் கடந்த இரண்டு நாட்களாக வாழை தென்னந்தோப்பில் புகுந்து ஏராளமான தென்னை வாழை மரங்களை பிடுங்கி எறிந்தது
இதுகுறித்து விவசாயி வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்ததன் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி பீட் வனத்துறை அதிகாரிகள் வனவர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு யானைகளை வெடிவைத்து யானையை காட்டுக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu