விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாகக் கணக்கிட செயலி

விவசாயிகள் சாகுபடி  செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாகக் கணக்கிட செயலி
X

பைல் படம்

விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாகக் கணக்கிடுவதற்கு தமிழ்நாடு அரசு செயலி அறிமுகப்படுத்தியுள்ளது

GRAINS இணையதளத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாகக் கணக்கிடுவதற்கு தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயலி குறித்து துணற அலுவலர்களுக்கு சென்னை பயிற்சி அளிக்கப்பட்டது

கடந்த மூன்று வேளாண் நிதிநிலை அறிக்கைகளில், உழவர்களின் நலனுக்காக பல்வவறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, வருவாய் போன்ற பதிமூன்றுக்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பலன்களை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் “க்ரயின்ஸ்” (GRAINS - Grower Online Registration of Agricultural INput System) இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“க்சரயின்ஸ்” இணையதளத்தில் பதிவு செய்யப்படும் மூன்று முக்கியமான பயன்கள்:

1. சாகுபடி நிலத்துடன் இணைக்கப்பட்ட விவொயிகளின் தனிப்பட்ட விவரம் (Farmer Database with dynamic linking of Land records)

2. கிராமங்களில் உள்ள சாகுபடி நிலத்தில் நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் (Geo referencing of Village Maps)

3.சாகுபடி நிலத்தில் ஒவ்வொரு முறை சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பற்றிய விபரங்ளை நிகழ்நிலை அடிப்படையில் நில உ-டமை வாரியாக சேகரித்தல் (GIS Base Real Time Crop Survey) மேற்கண்ட மூன்று இனங்களில், முதல் இரண்டு இனங்களில், அதாவது, விவசாயிகளின் தனிப்பட்ட விவரங்களுடன் நில விவரங்களை இணைக்கும்பணியும், நில உடைமை வாரியாக புவியிடக் குறியீடு செய்யும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன

சாகுபடி விவரங்கள் எவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்?

வேளாண்மை, தோட்டக்கலை,வேளாண் காடுகள் போன்ற இனங்களில்.ஒவ்வொரு பருவத்திலும் நன்செய் பயிர்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வேளாண் வாரியாக நிகழ்நிலைஅடிப்டையில் பதிவு செய்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பணியினை எளிதாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடி செயலியில் என்னென்ன விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்கள் பற்றிய விவரங்களும் சர்வே எண், உள்பிரிவு வாரியாக ஏற்கெனவே புவியிடக்குறியீடு செய்யப்பட்டுள்ள இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, களப்பணியாளர்கள் சம்பந்தப்பட்ட

உட்பிரிவில் உள்ள நிலத்திற்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்யப்படும் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் போன்ற வோளாண் பயிர்களையும் , பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்ற வகை

பயிர்களையும், தேக்கு, மகாகனி, செம்மரம் போன்ற மரப்பயிர்கள் பற்றிய விவரங்களையும் பயிர் வாரியாக எத்தணை ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கணள பதிவு செய்ய முடியும். ஊடு பயிர், வரப்பு பயிர், கலப்புப் பயிராக சாகுபடி செய்யப்பட்டாலும், பதிவிடலாம். பயிர் பரப்பு மட்டுமல்லாது, பயிரின் நிலை, வளர்ச்சி பற்றிய விவரங்களையும் புகைப்படம் வாயிலாக பதிவு செய்ய இயலும். இத்தகைய பதிவு முறைக்கு கட்டாயம் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சர்வே எண் உட்பிரிவு உள்ள வயலுக்கு நேரடியாகச் சென்றால் மட்டுமே பயிர் சாகுபடி பதிவேற்றம் செய்ய முடியும்.வயலுக்குச் செல்லாமலே ,சம்பந்தப்பட்ட சர்வே எண் அல்லாது மற்ற இடங்களின் நின்றோ பயிர் சாகுபடியிணை பதிவிட இயலாது.

சாகுபடி விவரங்களை பதிவேற்றம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்:

1. இந்த செயலி மூலம் ஒவ்வொரு பசலியின் அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யப்படும் பயிர் விவரங்கள் நிகழ் நிலை அடிப்படையில் புகைப்படத்துடன் பதிவவற்றம் செய்யப்படுவதால், சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர் விலரங்களும் உரிய முறையில் ஒத்திசைவு செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவிடப்படும்.

2. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறு உயர் மகசூல் தொழில் நுட்பங்கள் , மானியத்திட்டங்கணள உரிய பயழாளிக்கு வழங்க முடியும்.

3. கிராமம் மட்டுமல்லாது, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் ஒட்டுமொத்தமாக, என்னென்ன பயிர் எவ்வளவு சாகுபடி

செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை உரிய முறையில் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு, அரசு கொள்கை முடிவுகளை எடுக்க இயலும்..

4. வெள்ளம், வறட்சி வபான்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேதம் அடைந்தால் , அதுபற்றிய விவரங்களை சர்வே எண் வாரியாக சரிபார்த்து, பயிர் சேதத்திற்கான நிவாரணத்தொகையை துல்லியமாகக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு விரைவில் வழங்க இயலும்..

சாகுபடி செயலியிணை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த பயிற்சி சென்னை அண்ணா நிர்வாக மேலாண்ணமப் பயிற்சி நிணலயத்தில் கடந்த 22.05.2023 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில், 35 மாவட்டங்களிலிருந்து வருவாய்த்துறை, வேளாண்துறை, மாவட்ட இ- சேவையினைச் சார்ந்த 114 அலுவலர்கள் கலந்து கொண்டனர் பயிற்சி பெற்ற 114 அலுவலர்கள் மாவட்ட அளவில் தலைமைப் பயிற்சியாளராக (Master Trainer) செயல்படுவார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அணைத்துக்கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், வேளாண்மை, தோட்டக்கலை உதவி அலுவலர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். திட்டத்தின் முக்கியத்துவத்தை வேளாண் இயக்ககத்தின் வேளாண்துணை இயக்குநர் சப.சவங்கடாெலபதி, இச்செயலியினை பயன்படுத்தும் முறை குறித்து திட்ட இயக்குநர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

பயிர் சாகுபடி செயலி எப்போது துவங்கும்?

சோதனை அடிப்படையில் 35 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 110 வருவாய் கிராமங்களில் சாகுபடி கணக்கெடுப்பு இச்செயலி மூலம் மேற்கொள்ளப்படும். அவ்வப்போது எதிர்கொள்ளும் இடர்பாடுகளை உடனடியாக சரி செய்து மாநிலத்தின் அனைத்து வருவாய் கிராமங்களிலும் எதிர் வரும் குறுவை பருவம் முதல் இந்த பயிர் சாகுபடிச் செயலியை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், “க்ரயின்ஸ்” தளத்தின் பயன்கள் விரைவில் விவசாயிகளுக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச்செயலர் (வேளாண் உழவர் நலத்துறை) தகவல் வெளியிட்டுள்ளார்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!