ஆதாரத்துடன் பேசுங்கள்..! காங்., மீது பா.ஜ.க., காட்டம்..!

ஆதாரத்துடன் பேசுங்கள்..! காங்., மீது பா.ஜ.க., காட்டம்..!
X

மத்திய அரசு மாநிலங்களுக்கு  நிதி ஒதுக்கீடு (கோப்பு படம்)

தமிழக காங்., தலைவர் அழகிரி எதையும் ஆதரத்துடன் பேச வேண்டும் என பா.ஜ.க.,வினர் விமர்சித்துள்ளனர்.

"மத்திய பாஜக அரசு தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டு பாஜக ஆளுகிற உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியும், எதிர்கட்சிகள் ஆளும் தமிழகத்தைப் போன்ற மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி வழங்குதையும் தொடர்ந்து கடைபிடிப்பதை நிர்மலா சீதாராமன் நியாயப்படுத்தி பேசி வருகிறார்" என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி புகார் எழுப்பி உள்ளார். ஆனால் அந்த புகாரில் உண்மையில்லை. அது கட்டமைக்கப்பட்ட பொய் என பா.ஜ.க.,வினர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

மாநிலங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, தனிநபர் வருமானம் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது. கீழே பாஜக, எதிர்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களின் புள்ளி விவரம் மற்றும் ஒதுக்கப்படும் நிதி அளவினை பார்க்கலாம்.

உத்தரபிரதேசம் - பாஜக :

மக்கள் தொகை : 24.14 கோடி

பரப்பளவு : 2,43,286 சதுர கிமீ.

தனிநபர் வருட வருமானம் : 83,565 ரூபாய்

நிதி பங்கீடு : 17.939%

குஜராத் - பாஜக:

மக்கள் தொகை : 7.07 கோடி

பரப்பளவு : 1,96,000 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 2,81 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 3.478%

தமிழகம் - திமுக:

மக்கள் தொகை : 7.69 கோடி

பரப்பளவு : 1,30,060 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 1.67 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 4.079%

பீகார் - ஐஜத + ஆர்ஜேடி:

மக்கள் தொகை : 13.10 கோடி

பரப்பளவு : 94,163 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 54 ஆயிரம் ரூபாய்

நிதி பங்கீடு : 10.058%

மே.வங்கம் - திரிணாமுல் காங். :

மக்கள் தொகை : 10.42 கோடி

பரப்பளவு : 88,752 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 1,41,373 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 7.523%

பஞ்சாப் - ஆம்ஆத்மி:

மக்கள் தொகை : 3.16 கோடி

பரப்பளவு : 50,362 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 1,73,873 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 1.807%

ஒடிசா - பிஜூ ஜனதாதளம்:

மக்கள் தொகை : 4.79 கோடி

பரப்பளவு : 1,55,707 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 1,50 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 4.528%

கோவா - பாஜக :

மக்கள் தொகை : 15.78 லட்சம்

பரப்பளவு : 3,702 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 4,72 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 0.386%

சிக்கிம் - பாஜக கூட்டணி :

மக்கள் தொகை : 6.90 லட்சம்

பரப்பளவு : 7,096 சதுர கிமீ

தனிநபர் வருட வருமானம் : 4.72 லட்சம் ரூபாய்

நிதி பங்கீடு : 0.388%

என ஆதாரங்களை வெளியிட்டுள்ள பா.ஜ.க.,வினர் எஜமானர்களின் குரலை ஒலிக்கும் அழகிரி, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் எங்கே, எப்படி இருக்கிறது என்று ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!