41 வது முறையாக குருதிக் கொடையளித்த வருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் பாராட்டு
41 வது முறையாக குருதிக் கொடையளித்தவருக்கு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது
உலக ரத்ததான தினத்தையொட்டி 41-வது முறையாக குருதிக் கொடையளித்த பொன்னேரியைச் சேர்ந்த எஸ்.பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தியது.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது: ஏ.பி.ஓ. ரத்த வகைகளை முதன் முதலில் மருத்துவர் கார்ல் லேண்ஸ்டிடயனர் 1900-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அவரது பிறந்த தினமான ஜூன் 14-ஆம் தேதி உலக ரத்ததான தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
2023-ஆம் ஆண்டு உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்தத்தைக் கொடுங்கள், பிளாஸ்மாவைக் கொடுங்கள், உயிரைப் பகிந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியங்கள் முழக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் எப்போதும் தானமாகக் கொடுக்கப்படும் ரத்தம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையான கட்டமைப்பு மூலம் ரத்தம் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சைகளை அளிக்க முடியும்.
41-ஆவது முறையாக குருதிக் கொடையளித்தவருக்கு பாராட்டு:
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் பொன்னேரி அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.பாலாஜி கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தார்.
இவர் 41-ஆவது முறையாக ரத்ததானம் செய்துள்ளார். இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் வகையில் ஸ்டான்லி மருத்துவனை சார்பில் பொன்னாடை போர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார். மேலும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது என்றார் பாலாஜி.
நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ்குமார், துணை முதல்வர் டாக்டர் ஜானெட் சுகந்தா, துறைத் தலைவர் டாக்டர் ராஜ்குமார், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் வனிதா மலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu