முதல்வராக ஸ்டாலின் முதல் 5 கையெழுத்து
மு.க.ஸ்டாலின்.(கையெழுத்திடுவது மாதிரி படம்)
முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட பின் தலைமைசெயலகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின்,
முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரணம், ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் போட்டார். அவரது முதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல் தவணையாக, இம்மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2வது கையெழுத்தாக ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.
3வது கையெழுத்தாக தமிழக அரசு உள்ளூர்(டவுன்) பஸ்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் பெண்கள் பயணம் செய்யலாம்.
4வது கையெழுத்தாக மக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை டுக்கும்விதமாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிப்பது.
5வது கையெழுத்தாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்ற 5 கோப்புகளில் தனது பதவி ஏற்பின் முதல் நாளில் கையெழுத்திட்டார்.முன்னதாக பதவியேற்றதும் முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரம், கருணாநிதி இல்லம் சென்றார். அங்கு கருணாநிதியின் படத்திற்கு கண்ணீரோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது கண்ணீரை பார்த்த உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.
கோபாலபுரத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாநினைவிடம், கருணாநிதி நினைவிடம் சென்று பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் இருந்தனர்.பின்னர் அங்கிருந்து மறைந்த முன்னாள் திமுக பொது செயலாளர் அன்பழகன் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்துதான் தலைமை செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu