கணவர், முதல்வர் : மனைவி ஆனந்த கண்ணீர்..!

கணவர், முதல்வர் : மனைவி ஆனந்த கண்ணீர்..!
X

முதல்வராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் 

மு.க ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனதும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.

தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


கொரோனா பரவல் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். இதனை அடுத்து கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்புடன் வந்த மு.க ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு முகஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் பதவி பிரமாணத்தின்போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.

பின்னர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து 34 அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி பிரமாணம் ஏற்று கொண்டனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்