சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
X

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெறும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், நடைபெற்ற, சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறும் வகையில், பிரதி வாரம்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் தொடர்பு முகாம் ஆகியவைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து தகுதியுடைய நபர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மனுதாரர்களின் எண்ணிக்கையினை குறைத்திடும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டஅளவில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிக்கும் பகுதியிலேயே கோரிக்கை மனுக்கள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இச்சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலவாரியத் திட்டத்தில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17,000 மதிப்பீட்டில் ரூ.34,000 நிதியுதவியும், செவித்திறன் குறையுடையோருக்கான தக்க செயலிகளுடன் கூடி கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,000 மதிப்பீட்டில் ரூ.77,000 மதிப்பிலான கைபேசியும், இலவச காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2,820 மதிப்பீட்டில் ரூ.16,920 என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.1,27,920 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தனித்துணை ஆட்சியர் சமூகப்பாதுகாப்புத் திட்டம் மு.காமாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் து.கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!