சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 24-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி கொண்டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக, 24-ம் தேதி அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராமசபைக் கூட்டம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில், தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினமான 24-ம் தேதியன்று காலை 11 மணியளவில், கிராமசபைக் கூட்டம் நடத்திடவும், கிராமசபைக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த 17 கூட்டப் பொருள்கள் மற்றும் 9 இலக்குகள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிடவும், உறுதிமொழி எடுத்திடவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமசபைக் கூட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும் மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24-ம் தேதி கிராமசபைக் கூட்டத்தினை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திடவும், கிராமசபை நெறிமுறைகளை பின்பற்றவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (கிராம ஊராட்சிகள்) அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு