சிவகங்கை மாவட்டத்தில் மே.1 -ல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் மே.1 -ல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

பைல்படம்

தூய்மைபாரத இயக்கம், உழவர் நலத்துறை, மகளிர் திட்டம், விவசாயிகள் கடன் அட்டை போன்ற 15 கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படுகிறது

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலுள்ள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.05.2022 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும் எதிர்வரும் 01.05.2022 அன்று தொழிலாளர் தினம் கிராமசபைக் கூட்டம் காலை 10 மணியளவில், கிராமசபைக் கூட்டம் நடத்திடவும், கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த 12 கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபைக்கூட்டத்தில், ஊராட்சி நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவினம் விபரம், எடுத்துச் செய்யப்பட்ட பணிகள், ஒன்றிய அரசு ரூ மாநில அரசு திட்டங்கள், பயனாளிகள் விவரம், மாவட்ட அளவிலான புகார் மையம்,

சுகாதாரம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், உழவர் நலத்துறை, மகளிர் திட்டம், விவசாயிகள் கடன் அட்டை போன்ற 15 கூட்டப் பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும், பல்வேறு துறைகளிலிருந்து ஒரு பற்றாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கிராமசபைக் கூட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும் மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.05.2022-ம் தேதி கிராமசபைக் கூட்டத்தினை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திடவும், கிராமசபை நெறிமுறைகளை பின்பற்றவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (கிராம ஊராட்சிகள்) அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
150 ஏக்கர் பருத்தி, மக்காச்சோளம் சேதம்: ஏரி தண்ணீர் வயலில் புகுந்து வடியாததால் பெரும் இழப்பு!