சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி(பைல்படம்)
வருவாய் கோட்ட அளவில் நடைபெறும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, வருகிற 25.04.2022 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 29.04.2022 அன்று காலை 10.00 மணியளவில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில், அந்தந்த கோட்டப்பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu