சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
X
School Students - சிவகங்கை மாவட்டம், அரளிக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சப் பெரியகருப்பன் வழங்கினார்

School Students - சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பி.அழ.கருத்தான் கோனார் - கருப்பாயி அம்மாள் கல்வி மற்றும் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று, அரளிக்கோட்டை அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், அரகு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு உதவித்தொகைகளையும் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும், வழங்கினார்.

பின்னர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கூறியதாவது: அரளிக்கோட்டை கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தொழில் செய்தும், பணிபுரிந்தும் நல்லநிலைமையில் உள்ளனர். அவர்களைப் போன்றோர்களுக்கு இக்கிராமத்தில் பயின்ற கல்விதான் அடிப்படையாக உள்ளது. நானும் இக்கிராமத்தில் அடிப்படைக்கல்வி பயின்றவன் என்பதில் பெருமை கொள்கிறேன். தற்போது, உங்களுக்கு சேவை செய்கின்ற வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

கல்வி தான் எதிர்காலத்தின் அடிப்படையாக அமைகிறது. நாம் பயிலுகின்ற முறையைப் பொறுத்துதான் அமைகின்றது. 84 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளி நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இப்பள்ளியில் 10-ஆம் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, இப்பகுதியைச் சார்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து மாணவர்கள் கல்வி பயில ஊக்கப்படுத்திட வேண்டும்.

தற்போது, உயர்நிலை வரை உள்ள இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அறிவுத்திறன் மிக்க மாணாக்கர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. அப்படிப்பட்ட சிறந்த மாணாக்கர்களை இப்பள்ளியில் உருவாக்கிய ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இளைஞர் மற்றும் வயதானவர்கள் ஆகியோர்களுக்கு பயனுள்ள வகையில் நிரந்தரக் கட்டிடத்தில் நூலகம் அமைத்து அதற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கிணங்க, கூடுதலாக பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அரளிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்ற 3 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், 8 மாணாக்கர்களுக்கு உதவித்தொகையும் மற்றும் அரளிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், அங்கன்வாடி மையப்பணியாளர்கள், துப்புரவுப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நினைவுப்பரிசுகளை பி.அழ.கருத்தான் கோனார் - கருப்பாயி அம்மாள் கல்வி மற்றும் தொண்the டு நிறுவன அறக்கட்டளை சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் த.சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மேரி சாந்தா சகாயராணி, மாவட்டக்கல்வி அலுவலர் (திருப்பத்தூர்) பாலதிரிபுரசுந்தரி, அரளிக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் கா.புவனேஸ்வரி காளிதாஸ், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, அரளிக்கோட்டை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.தொல்காப்பியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!