சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி (பைல் படம்)

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 27.04.2022 முதல் 01.05.2022 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 27.04.2022 முதல் 01.05.2022 வரைசிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு பி.எம் கிசான் எனப்படும் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதிஉதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

பி.எம். கிசான் பயனாளிகள் அனைவருக்கும் உதவித் தொகை கிடைப்பதற்கு அரசினால், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அந்தவகையில் ,சிறப்பு வாராந்திர முகாம், சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்து களிலும் 27.04.2022 முதல் 01.05.2022 வரை நடைபெற உள்ளது.அம்முகாமில், வேளாண்மைத்துறை அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

ஆகையால், பி.எம். கிசான் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் கலந்து கொண்டு, விண்ணப்பத்தினை பெற்று, சேவை வழங்கும் வங்கிகளில் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து, பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ரூ.1,60,000- வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!