சிவகங்கை - கண்மாய் இங்கே தான் இருக்கு - இ்ங்க இருந்த மணல் எங்கே போச்சு -பொதுமக்கள் கேள்வி

சிவகங்கை - கண்மாய் இங்கே தான் இருக்கு - இ்ங்க இருந்த மணல் எங்கே போச்சு -பொதுமக்கள் கேள்வி
X
கண்மாயில் நீரின்றி வறண்டு கிடப்பதால் அதன் கால்வாய் பகுதியில் ஆற்று மணல் திட்டு அதிகரித்து வருகின்றன - திருட்டும் அதிகரித்து வருவதாக புகார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட ஓரசூர் ,வெள்ளூர் ,பப்பனி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஒரசூர் கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர் தற்போது இந்த கண்மாயில் நீரின்றி வறண்டு கிடப்பதால் அதன் கால்வாய் பகுதியில் ஆற்று மணல் திட்டு அதிகரித்து வருகின்றன. கண்மாய்க்குள் இருக்கும் மணலை அதே பகுதியை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக எடுத்து செல்கின்றனர்

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் வெளியில் வராத சூழ்நிலையில் கண்மாயில் இருக்கும் மணலை திருட்டுத்தனமாக திருவேகம்பத்தூர், பப்பனி, பொன்னத்தி வழியாக கனரக வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்கின்றனர். இதனால் கண்மாயின் நீர்வரத்து பெருமளவில் சேதம் அடைந்து விவசாயம் பாதிக்கும் நிலையில் உள்ளதால், இந்த கண்மாய் நீர்வரத்து நம்பி சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு காரணமான கண்மாய் நீர்வரத்து கால்வாய் பகுதிகளை மீட்டெடுத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இது சம்பந்தமாக ஆதாரங்களைத் திரட்டி மணல் திருட்டு தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அதனை தொடர்ந்து தேவகோட்டை வருவாய் துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

Tags

Next Story