சிவகங்கை சங்கப் புலவர் தூணுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
தமிழ் கவிஞர் நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம், சங்கப்புலவர் ஓக்கூர் மாசத்தியார் நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி.
தமிழ் கவிஞர் நாளையொட்டி, சங்கப்புலவர் ஓக்கூர் மாசத்தியார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
சிவகங்கை மாவட்டம், ஓக்கூர் ஊராட்சியில் உள்ள சங்கப்புலவர் ஓக்கூர் மாசத்தியார் நினைவுத் தூணிற்கு தமிழ் கவிஞர் நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் ,மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 131-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழ் கவிஞர்கள் தினமாக கொண்டாடும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் பெருமைக்குரிய சங்கப்புலவர் ஒக்கூர் மாசாத்தியார் அவர்களை போற்றும் வகையில் இன்று தமிழ் கவிஞர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அத்தகைய சங்ககாலத்தில் வீரமிக்க ஒரு பெண்பாற் புலவராக ஒக்கூர் மாசாத்தியார் அவர்கள் இப்பகுதியில் வாழ்ந்த பெருமை உண்டு. இவர் சங்க இலக்கியத் தொகுப்பாகிய எட்டுத் தொகை நூல்களில் அமைந்த குறுந்தொகையில் 5 பாடல்களையும், புறநானூற்றில் ஒரு பாடலையும் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார்.
குறிப்பாக, புறநானூற்றில் இவர் "கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே" எனத் தொடங்கும் பாடலில் ஒரு வீரமிக்க பெண்ணானவள். முதல் நாள் தனது தந்தையை அனுப்பி வைத்து போரில் அவர் உயிரழந்தார். மறுநாள் நடந்த போரில் தனது கணவன் கலந்து கொண்டு அவரும் உயிரிழந்தார். அந்த வீரத்தாய் தன் நடந்த அத்தனை சூழ்நிலையிலும் தொடர்ந்து நடைபெற்ற போருக்காக தனது ஐந்து வயது மகனை அழைத்து போருக்கு தயார்படுத்தி அனுப்பி வைத்தார். அந்தப்போரிலும் மகன் இறந்துவிட்டான் என்று செய்தி கேட்டதும் அவன் இறந்தாலும் பரவாயில்லை அவன் புறமுதுகு காட்டாமல் நேருக்கு நேர் போராடி நெஞ்சில் அம்பு தாங்கி இறந்துள்ளான்.
அதுவே, இந்த மண்ணின் வெற்றிக்கு பெருமை சேர்க்கும் என தெரிவித்த மாபெரும் தலைவர் மாசாத்தியார் ஆவார். காரணம் வெற்றி ஒன்றே இலக்கு என்பதே நோக்கமாகும். அப்பேற்ப்பட்ட இந்த வீரபூமியில் வாழ்ந்த ஒவ்வொரு சங்கப்புலவர்களையும் நினைக்க வேண்டும். வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் சங்ககாலப் புலவர்களை போற்றும் வண்ணம் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
பின்னர், 19.04.2022 அன்று அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர், வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர்பூமா அருணாச்சலம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu