விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் குழி; வாழப்பாடி அருகே பரபரப்பு

விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் குழி; வாழப்பாடி அருகே பரபரப்பு
X

விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் குழி.

வாழப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் திடீர் குழி தோன்றியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறையில் கிழாக் காடு செல்லும் சாலையில் வசிப்பவர் துரைசாமி (60). இவரது விவசாய நிலத்தில் திடீரென்று 10 அடி ஆழம், அகலத்தில் குழி ஏற்ப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவலறிந்து அங்கு விரைந்த வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டு யாரும் அங்கு செல்லாதவாறு சுற்றிலும் பச்சை வலை சுற்றிலும் கட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த திடீர் குழியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும், இது குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
business impact of ai