வாழப்பாடி அருகே யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேர் கைது

வாழப்பாடி அருகே யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள்

சேலம் வாழப்பாடி அருகே யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்

கோவை மாவட்ட வன அலுவலர்களுக்கு கடந்த 15 ஆம் தேதி அன்று வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் யானைத் தந்தங்களை சிலர் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் தொடர்ந்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் யானை தந்தங்களை வாங்க முயற்சிக்க படுவதாக வந்த தகவலைத் அடுத்து உதவி வன பாதுகாவலர் மற்றும் பணியாளர்கள் கண்காணிக்கத் தொடங்கினர். தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டபோது பெரியநாயக்கன்பாளையத்தில் தந்தங்கள் இல்லை எனவும் அது சேலம் மாவட்டத்தில்தான் இருப்பதாகவும், சேலத்தில் தான் விற்க முயற்சி நடக்கிறது என்றும் தெரியவந்தது.

இந்த தகவலை சேலம் வன பாதுகாப்பு படை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பணியாளர்கள், சேலம் சென்று சேலம் வன பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து வாழப்பாடி அருகே யானை தந்தங்களை விற்க முயன்றவர்களை பிடித்து 11 கிலோ எடை கொண்ட ஒரு ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து யானை தந்தங்ககள் விற்பனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சசிகுமார், சேட்டு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பரத் மற்றும் பிரவீன் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் சேலம் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil