சேலத்தில் வடமாநில இளைஞரை அடித்துக்கொன்ற கூலித்தொழிலாளி:போலீசார் விசாரணை

சேலத்தில் வடமாநில இளைஞரை அடித்துக்கொன்ற கூலித்தொழிலாளி:போலீசார் விசாரணை
X
சேலத்தில் வடமாநில இளைஞரை கட்டையால் அடித்துக்கொன்ற கூலித்தொழிலாளியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் வடமாநில இளைஞரை கட்டையால் அடித்துக்கொன்ற கூலித்தொழிலாளியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்குமார் மண்டல். இவர் பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கிரானைட் ஆலை ஒன்றில் பணியாற்றி வந்தார். இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரம் என்பவருடன் பிரசன்குமார் மண்டல் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு மதுபோதையில் இருந்த பிரசன்குமார் மண்டலை சுந்தரம் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரசன்குமார் மண்டல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதால் பிரசன்குமார் மண்டலை தாக்கியதாகவும், எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்து விட்டதாகவும் சுந்தரம் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!